மனிதன்

உலகமெனும் ஏட்டில் எனக்கான பக்கம்.

Saturday, July 15, 2006

2.மனிதன்

நான் மனிதன் என்ற நினைவு பல காரனங்களால் மறந்துவிடுவதால்,அதை அவ்வப்பொழுது நினைவு படித்துக்கொள்ள இப்பதிவு.
மறதியால் நான் மிருகமாகிவிடுகிறேன் என நினைக்க வேண்டாம். மனித தன்மையில் இருந்து விலகி அதிமனித தன்மைக்கும் சில நேரம் செல்வதுண்டு.

நான் மனிதன் என்று சொல்லும் பொழுதே யார் மனிதன் என்று தெளிவு கொள்ளவும் விழைகிறேன். மனித உருவத்துடன் பிறக்கும் அனைவரும் மனிதரே. குட்டையன், நெட்டையன், குண்டு, ஒல்லி, தொப்பையன், சொட்டையன், கூனன், குருடன், செவிடன், முடவன், ஊமையன், மூளை வளர்ச்சி அற்று பிறந்தவன் என அனைவரும் மானிடரே.

ஓரு மனிதனுக்குப் பிறந்த மனிதக்குழந்தை மனிதனே. எனவே
உருவத்தை வைத்து ஒரு மனிதனை நீயெல்லாம் ஒரு மனுஷனாடா என்று திட்டாதீர்கள். சக மனித உருவத்திடம் அன்பு செய்யுங்கள்.
அன்புடன்,
ராமச்சந்திரன்.

0 Comments:

Post a Comment

<< Home