6. என்ன காதலோ?.
இது முதல் முறையாக ஏற்படுவது இல்லை,பழக்கமானதுதான், என்றாலும் ஏனோ ஜீரனிக்கவே முடியவில்லை. எனக்கு சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வாழ்க்கையில் ரொம்ப லேட்டாகத்தான் உருவானது (எனது இருபத்தி மூன்றாவது வயதில்).ஆனால் அப்படி ஒரு முடிவெடுத்தவுடன் குருவைத் தேடி அதிக சிரமப்படவில்லை.எனது பக்கத்து வீட்டு அக்காவே சங்கீதம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
மாயாமாளவகவுளை-இல் நான் தத்தித்தடுமாறிக் கொண்டிருந்தபோது, ஒரு நாள்,எனது சங்கீத குரு நாளையிலிருந்து வகுப்பு கிடையாது என்று சொல்லிவிட்டார். SPB ஆகும் எனது கனவு கலைந்து போன அதிர்ச்சியில், நான் ஏன் என்று கேட்டேன்.நாளை எனது திருமணம் என்று கூறினார்.
என்னக்கா இது ஒரு பத்திரிக்கை இல்லை, வீட்டில கல்யாணச் சுவடே தெரியவில்லை என்று கேட்ட பிறகுதான், முழுவிவரங்களும் தெரிய வந்தது.அது காதல் திருமணம்.
அக்கா தேவர் இனத்தை சேர்ந்தவர்.அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் அந்தனர்.அதுவும் இல்லாமல் அக்காவின் குடும்பம் பகுத்தறிவு கொள்கையில் ஊறிய குடும்பம்.அதனால் அக்காவின் குடும்பத்தில் ஒரு கொதிப்பான சூழ்நிலை நிலவி வந்தது. அக்கா என்னிடம் அவசியம் திருமணத்திற்கு வரவேண்டும் என்று சொல்லியிருந்ததால், மறு நாள் காலை அடித்துப் பிடித்து போய் சேர்ந்தேன்.
திருமணம் முடிந்தது. பெண் வீடு மற்றும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து யாருமே வரவில்லை.வந்திருந்த அத்தனைபேரும் நண்பர்கள்.ஏன் இப்படி என்று இன்னும் தீவிர விசாரனையில் தெரிய வந்த இன்னொரு உண்மைதான், எனது முதல் அஜீரனக் கோளாறு. அது அக்காவைவிட அவரது கணவர் இரண்டு வருடம் இளையவர்.
இரண்டாவது அஜீரனக்கோளாறு - சச்சின் டெண்டுல்கரைவிட அவரது மனைவி அஞ்சலி ஐந்து வருடம் பெரியவர்.
மூன்றாவது அஜீரனக்கோளாறு - தனுஷைவிட ஐஸ்வர்யா இரண்டு வயது பெரியவர்.
நான்காவது கோளாறு - ஐஸ்வர்யாராயைவிட அபிஷேக்பச்சன் இரண்டு வயது இளையவர்.
காதல் உயர்ந்த விஷயம்தான் இருந்தாலும் இந்தமாதிரியான கலாச்சாரக் கோளாறை என்னால் ஜீரனிக்கவே முடியவில்லை.
அன்புடன்,
ராமச்சந்திரன்.

1 Comments:
/அக்காவின் குடும்பம் பகுத்தறிவு கொள்கையில் ஊறிய குடும்பம்.அதனால் அக்காவின் குடும்பத்தில் ஒரு கொதிப்பான சூழ்நிலை நிலவி வந்தது.//முரண்பாடா?..இல்லை நக்கலா?.நெஞமா புரியல.
அடேங்கப்பா இத்தனை அஜீரனக்கோளாறா?இன்னும் ஒன்னு சேத்துக்கோங்க ...உலகின் மாமேதை என்று அறியப்படும் மார்க்ஸ் ,ஜென்னிஜ விட நான்கு வயது சிறியவர். இன்றும் உலகின் சிறந்த காதல் ஜோடி வரிசையில் உள்ளது.. எது கலாச்சார கோலாறு.?இதற்கு என்ன சொல்ல போறீங்க மனிதா.நீங்க என்ன கலாச்சார காவலரா?
Post a Comment
<< Home